• Jan 18 2025

ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா? பிரியங்காவின் சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் விஜே பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இவர் நிகழ்ச்சியை செம ஃபன்னாக தொகுத்து வழங்கி வருவார் என்பதும் முக்கியமாகும்.

மூன்று முறை தொடர்ச்சியாக சிறந்த பெண் தொகுப்பாளினி விருது பெற்றவர். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர்களில்  விஜே பிரியங்காவும் ஒருவர் ஆவார்.



பிரியங்கா கடந்த 2014 ஆம் ஆண்டு, விஜய் டிவியில் பணி புரிந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் பிரியங்கா பிரவீனை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்க பிரியங்கா வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.



அதன்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடு தொகுத்து வழங்குவதற்கு 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. 

எனினும், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து பிரியங்காவும் எந்த விளக்கத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.

இதேவேளை, பிரியங்காவின் சம்பள விபரத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆத்தாடி இவ்வளவு சம்பளமா? என்று அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement