• Apr 01 2025

செருப்பில்லாமல் நடக்கும் விஜய் ஆண்டனி! நெஞ்சை உலுக்கும் வேதனை என்ன? அவரே சொன்ன பதில்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என திரைத்துறையில் பன் முகத் திறமை கொண்டவரைாக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. 

கடந்த 2005ல் சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.தொடர்ந்து நான் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், அண்மையில் தன்னுடைய மூத்த மகளை பறி கொடுத்தார். அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவிப்பதோடு தான் மீண்டும் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவித்திருந்தார். அண்மையில் தான் இவர் நடிப்பில் ரத்தம் படம் வெளியானது. 


இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், சமீப காலங்களில் செருப்பு அணியாதது ஏன் என விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய விஜய் ஆண்டனி, பெருசா காரணம் எதும் இல்லை. போட வேண்டம்னு தோனுச்சு போடல, செருப்பு போடனும்னு தோனுச்சுனா திரும்ப போடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement