சமீபகாலமாக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மலையாள படங்கள் சூப்பர் ஹிட் ஆகி 50 கோடி
முதல் 100 கோடி ரூபாய் வரை
வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்து தயாரிக்கப்படும் தமிழ் மாஸ் நடிகர்களின் படங்கள்
தோல்வி அடைந்து வருவது மாஸ் நடிகர்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில்
மாஸ் நடிகர்களின் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகிறது என்பதும் நடிகர்களின் சம்பளம் அதிகம் என்பதால் பட்ஜெட் எகிறி விடுவதால் ஒருவேளை படம் ஓரளவு நல்ல
வசூல் செய்தால் கூட தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை
என்றும் கூறப்பட்டு வருகிறது.
சின்ன பட்ஜெட்டில் தயாரான ’லவ் டுடே’ ’பார்க்கிங்’
’லவ்வர்’ ‘ஜோ’ உள்ளிட்ட படங்கள்
தான் தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு லாபத்தை கொடுத்து வருகிறது என்பதும் பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருவது கோலிவுட் திரை உலகை அதிர்ச்சி
அடைய செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் அதே நேரத்தில் கதைக்கு
முக்கியத்துவம் கொடுத்து, காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையாள திரைப்படங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அந்த படங்கள் 50 கோடி
முதல் 100 கோடி ரூபாய் வரை
வசூல் செய்து வருகிறது.
சமீபத்தில் வெளியான ’மஞ்சும்மள் பாய்ஸ்’ ‘பிரேமலு’ ’பிரம்மயுகம்’ ஆகிய திரைப்படங்கள் குறைந்த
மற்றும் மீடியம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த படங்கள் அசால்டாக
50 முதல் 100 கோடி ரூபாய் என்ற
இலக்கை தொட்டு வருவது தான் தமிழ் திரை
உலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்
பாலிவுட் திரை உலகில் இப்படித்தான்
பிரம்மாண்டமான படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அதே நிலை தமிழ்
திரையுலகமும் சந்தித்து வருவதாகவும் இனிமேலாவது தமிழ் திரை உலகினர் சுதாரித்து
நடிகர்களின் சம்பளத்தை குறைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து மேக்கிங்கிற்கு அதிக செலவு செய்ய
வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழ்த்திரை உலகம் காணாமல் போய்விடும் ஆபத்து இருப்பதாகவும் கோலிவுட் திரை உலகினர் எச்சரித்து
வருகின்றனர்.
வெறும் மாஸ் மட்டும் வைத்து
இனிமேல் ரசிகர்களை ஏமாற்ற முடியாது என்பதை கோலிவுட் திரையுலகினர் புரிந்து கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!