நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணத்திற்கு பிறகு படு பிசியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு புதிய திரைப்படம் ஒன்று ரிலீஸ் ஆகா காத்திருக்கிறது. இந்நிலையில் ஷாட் ட்ரெஸ் போட்டு ஹன்ஷிகா ஷேர் செய்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள திகில் நாடகமான 'கார்டியன்' திரைப்படம் சமீபத்தில் தணிக்கைப் பணிகளை முடித்து U/A சான்றிதழைப் பெற்றுள்ளது. சபரி மற்றும் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்ட டீஸர் மற்றும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
படத்தின் குழும நடிகர்களில் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ராஜேந்திரன், பிரதீப் ராயன் மற்றும் டைகர் தங்கதுரை போன்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் அடங்கும். நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணத்திற்கு பிறகு இந்த படப்பிடிப்பில் படு பிசியாக நடித்து வருகிறார். அவர் தற்போது கிளாமர் ஆக ஷார்ட் உடையில் கொடுத்திருக்கும் போஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.





Listen News!