தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தனது சமீபத்திய நேர்காணலில் ரசிகர்கள் பற்றிய தனது மனநிலை மற்றும் பார்வையைப் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக எந்த நடிகரின் வளர்ச்சியிலும் ரசிகர்களின் ஆதரவு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அந்த ஆதரவை தாண்டி சில ரசிகர்கள் நடிகர்களுக்காக வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர். அந்த வகையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் தனது கருத்துகளை திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் அதன்போது, “என்னுடைய ரசிகர்கள் என்னை வழிபட வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் கடவுளையும் அவர்களுடைய பெற்றோர்களையும் மட்டுமே வணங்க வேண்டும். எனக்கு மிகவும் நட்பான மற்றும் சகோதரத்துவமான ரசிகர்கள் இருக்க வேண்டும். அதனால் தான் அவர்களை எப்போதும் என்னுடைய சகோதர, சகோதரிகளாகவே அழைக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
இந்த ஒரு சொல்லிலேயே அவரது எளிமையும் ரசிகர்களுக்கான அன்பும் தெளிவாகப் புரிகிறது. நடிகர் என்ற முறையில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், தன்னை ஒரு சாதாரண மனிதராகவே ரசிகர்கள் காண வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
Listen News!