விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி இருக்கும். அதனால் தான் பிக் பாஸ் இல்லமே சூடு பிடிக்கும்.
பிக் பாஸ் சீசன் 9-ல் ஆரம்பத்தில் FJ மற்றும் ஆதிரைக்கு இடையில் காதல் மலர்ந்தது. அவர்கள் எல்லை மீறி சென்றனர். அதனால் விஜய் சேதுபதியும் கண்டித்தார். இறுதியில் ஆதிரை எலிமினேட் ஆகி வெளியேறினார்.
இன்னொரு பக்கம் துஷாருக்கு அரோராவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அவர்களும் எல்லை மீறி சென்றனர். விஜய் சேதுபதி துஷாரை கண்டித்தார். இறுதியில் துஷாரும் எலிமினேட் ஆகி வெளியேறினார்.
அதே போல கம்ருதீனுக்கும் பார்வதிக்கும் இடையில் ஒருவித நெருக்கம் காணப்பட்டது. ஆனாலும் அதற்கு இடையில் அரோரா வந்து தனது வேலையை காட்டினார். இதனால் பார்வதி அவரை பலமுறை எச்சரித்தார்.

அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆதிரை மீண்டும் உள்ளே நுழைந்துள்ளார். இது FJ க்கும் வியானாவுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
மேலும் மீண்டும் உள்ளே வந்த ஆதிரை பார்வதியிடம் அரோரா பற்றியும் கமருதீன் பற்றியும் ரகசியமாக பேசினார். இதனால் இந்த லவ் ரேங்கை முடிக்க வேண்டும் என்று பார்வதி நினைத்தார்.
இந்த நிலையில், கமருதீனுக்கும் விஜய் பார்வதி மீது உண்மையாகவே ஒரு வித பீலிங் இருக்கு என்று நிரூபணம் ஆகி உள்ளது. அதன்படி கமருதீன் பார்வதியிடம் பேசும் போது, என்னதான் நான் உன் கூட சண்டை போட்டு விலகி இருந்தாலும் என்னால உன்ன பத்தி யோசிக்காமல் இருக்க முடியல.. பேசாமையும் இருக்க முடியல..
அன்னைக்கு நீ லேட்டா தூங்கும் போதும் கூட என்னால தான் லேட்டா தூங்குறியோ என்று யோசனை. எனக்கு உண்மையாவே உன்னை பிடிக்கும். வெளியில் போயிட்டு எல்லாம் பார்த்துக்கலாம். நான் வீட்டுக்கு வந்து பேசுறேன் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!