சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மகேஸ்வரி வீட்டில் இருக்கும்போது வித்யாவும் அங்கு வருகின்றார். மீனாவுக்கு ரோகிணி பற்றிய உண்மை தெரியவில்லை என்று நினைத்து க்ரிஷின் அம்மா கனடா சென்று விட்டதாக பொய் சொல்லுகின்றார்.
எனினும், க்ரிஷின் அம்மா ரோகிணி தானே என்று மீனா உண்மையை உடைக்க, தெரியாதது போல நடிக்கின்றார். இறுதியில் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லுகிறார் மகேஸ்வரி .
இதன்போது இவள் ஒரு பிராடு. என்னையும் பொய் சொல்ல வச்சிட்டாள். நான் நிறைய தரம் சொல்லி இருக்கின்றேன் என்று மீனாவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார் வித்யா . அதன் பின்பு க்ரிஷும் மனோஜூம் வேற வேற இடத்தில் இருந்தால் எப்படி அவர்களுக்குள் நெருக்கம் வரும் என்று அவர்களை ஒரே வீட்டில் வைக்க பிளான் போடுகின்றார்கள்.

அதன்படி க்ரிஷின் கற்பனை அம்மாவின் கதையை முடிக்கின்றனர். பின்பு அதனை காரணமாக வைத்து க்ரிஷை வீட்டில் சேர்க்க முடிவு செய்கின்றார்கள். எனினும் க்ரிஷின் பாட்டி வீட்டிற்கு வரும்போது முத்து இருக்க வேண்டாம் என்று ரோகிணி கேட்கின்றார்.
ஆனாலும் அவர் இருந்தால்தான் விஜயாவை எதிர்த்து பேசுவார் என்று மீனா ஐடியா கொடுக்கின்றார் . முத்துவுக்கு சவாரி வரவும் அதை செல்ல விடாமல் மீனா தடுத்து வைக்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!