• Jan 18 2025

ஒரே படத்தில் இரண்டு நடிப்பு அரக்கன்கள்.. தாங்குவார்களா ரசிகர்கள்?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ஒரே படத்தில் இரண்டு நடிப்பு அரக்கன்கள் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து இந்த நடிப்பை ரசிகர்கள் தாங்குவார்களா என்று கூறப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிப்பு அரக்கன் என்றால் உடனே எஸ்ஜே சூர்யா என்று சொல்லிவிடலாம். அவர் வில்லன் கேரக்டரில் நடித்தாலும் கூட அவருக்காக தான் சில படங்கள் வெற்றி பெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் வெற்றி பெற்ற ’மார்க் ஆண்டனி’ படம் உள்பட பல படங்கள் எஸ்ஜே சூர்யா வின் நடிப்புக்காகவே ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் முறையாக எஸ்ஜே சூர்யா ஒரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் அதுவும் மலையாளத்தில் நடிப்பு அரக்கன் என்ற பெயர் பெற்ற பகத் பாசில் உடன் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை விபின் தாஸ் என்பவர் இயக்க உள்ளார். இவர் மலையாளத்தில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற ’ஜெய ஜெய ஜெய ஹே’ என்ற படத்தை இயக்கியவர் என்பதும் இந்த படம் மிகவும் குறுகிய பட்ஜெட்டில் உருவாகி 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பகத் பாசில் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவருக்கும் சம அளவிலான கேரக்டர்கள் இந்த படத்தில் உருவாக்கபட்டு இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்ஜே சூர்யா முதல் முறையாக மலையாளத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அதுவும் பகத் பாசிலுடன் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement