• May 05 2026

’சூர்யா 44’ படத்தில் கார்த்திக் சுப்புராஜ் செய்யவிருக்கும் சம்பவம்.. பயிற்சிக்கு செல்லும் சூர்யா..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யா நடிக்க இருக்கும் 44வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக கார்த்திக் சுப்புராஜ் உடன் சூர்யா இணைந்துள்ளதை அடுத்து இந்த படம் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைலில் ஒரு அதிரடி ஆக்சன் படம் மட்டுமின்றி வழக்கம் போல் கிளைமாக்ஸில் ஒரு திருப்பம் இருக்கும் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில் சில மணி நேரங்களாக சூர்யா குதிரை பயிற்சி எடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதுமட்டுமின்றி குதிரை பயிற்சியாளர் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வரும் நிலையில் சூர்யா எதற்காக சூர்யா 44 படத்திற்காகத்தான் அவர் குதிரை பயிற்சி செய்கிறார் என்று கூறப்படுகிறது. எனவே கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தில் சூர்யாவை வைத்து ஒரு சம்பவம் செய்ய காத்திருக்கிறார் என்பது மட்டும் தெரிய வருகிறது.

இந்த படம் ஒரு ஹாலிவுட் படத்தில் ரீமேக் என்றும் அதிகாரபூர்வமாக அந்த படத்தின் டைட்டிலை உபயோகப்படுத்தப் போவதாகவும், சூர்யா இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளில் குதிரை சவாரி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படமாக இருக்கிறது என்பது மட்டும் தெரிய வருகிறது.

Advertisement

Advertisement