• Dec 07 2024

துப்பாக்கி கொடுத்த விஜய்கே சமாதி கட்டிய சிவகார்த்திகேயன்.. கெத்து காட்டும் SK பேன்ஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி  இயக்கி இருந்தார். இந்த படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

அமரன் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று நாட்களிலேயே 100 கோடி ரூபாயை வசூலித்திருந்தது. விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தை பார்த்த எல்லோரும்  சிவகார்த்திகேயனின் கடின உழைப்பை பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.

d_i_a

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மேலும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி சண்டையின்போது உயர்நீத்த மேஜர் முகுந்தின் உண்மை வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில், சிவகார்த்திகேயன் நடித்ததோடு மட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து காட்டிவிட்டார்.


இந்த நிலையில், அமரன் திரைப்படம் ஆறு நாட்களின் முடிவில் மொத்தமாக 163 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளதாம். தற்போது இந்த தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதே வேளை விஜய் நடித்த கோட் திரைப்படம் ஆந்திரா மாநிலங்களில் 18 கோடிகளை வசூலித்த நிலையில், அவரது திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் 19 கோடியை வசூலித்து கோட் படத்தின் சாதனையை முறை அடித்துள்ளதாக  சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கெத்து காட்டி வருகிறார்கள். 

Advertisement

Advertisement