தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகையாகவும், சமூக கருத்துகளை வெளிப்படையாகப் பேசும் பெண் என பல அடையாளங்களைக் கொண்டவர் நடிகை கஸ்தூரி. பல ஆண்டுகளாக சினிமா உலகில் நடித்து வரும் அவர், சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் அதிகம் அறியப்படாத ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

1990-களில் இந்திய அழகிப்போட்டிகள் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்தது. அந்த காலத்தில் மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு, பின்னர் உலக அழகிப் பட்டங்களை வென்று இந்தியாவின் அடையாளமாக மாறியவர் ஐஸ்வர்யா ராய். ஆனால், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் அவர்களுடன் ஒரே மேடையில் நின்ற மற்றொரு தமிழ் நடிகை இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. அந்த நடிகை தான் கஸ்தூரி.
சமீபத்திய பேட்டியில் நடிகை கஸ்தூரி, “நிறைய பேருக்கு தெரியாத விஷயம், நான் 1992ல மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றேன். 1994ல மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில டாப் 10ல வந்தேன். அங்க யாருகூட தோத்துப்போனேன்னா ஐஸ்வர்யா ராய் கிட்டயும், சுஸ்மிதா சென் கிட்டயும் தான். அவங்க டாப் 5ல வந்தாங்க. நான் டாப் 10ல இருந்தேன். வீட்ல சினிமாவே வேணாம் IAS படிக்கணும் என்று சொன்னாங்க." என்று கூறியிருந்தார்.

மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றதன் மூலம் கஸ்தூரிக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அவர் 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதும், பல ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டையும் தெரிவித்தனர். நடிகை கஸ்தூரியின் இந்த வெளிப்பாடு, வெற்றியின் பின்னணியில் இருக்கும் மறைக்கப்பட்ட முயற்சிகளையும், தியாகங்களையும் நினைவூட்டுகிறது.
Listen News!