• Feb 05 2026

3 மணி நேரம்னு யாரு சொன்னா.? உலகம் முழுக்க ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகுதா.?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில்  பொங்கலுக்கு ரிலீசாக உள்ள திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை எச். வினோத் இயக்குகின்றார்.  இளையதளபதி விஜய் நடிக்கும் இறுதி படம் இது என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு  காணப்படுகிறது. 

எதிர்வரும் ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது.  இதற்கான  பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  விஜய் கடைசியாக ஒரு பெரிய வெற்றியை  கொடுத்து சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ரசிகர்களும் விரும்புகின்றனர். 

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் ஓட்ட நேரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஜனநாயகன் படத்தில் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 6 நிமிடம் என்று செய்திகள் வெளியானது. இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அப்படி மூன்று மணி நேரம் படத்தில் என்ன தான் காட்டப் போகின்றார்கள் என்று. 


மேலும் இதற்கு விஜய் எப்படி சம்மதம் தெரிவித்து இருப்பார்? ஒருவேளை அவருக்கு இந்த விஷயம் தெரியுமா?  இது அவருடைய வெற்றியை பாதிக்காதா? என்றெல்லாம் சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.  ஆனாலும் இந்த படத்தின் ரன் டைம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் உறுதி செய்யவில்லை என்ற பேச்சும் அடிபடுகின்றன. 

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு  அனுமதி இல்லை என்பதால் காலை 9 மணிக்கு தான் ஜனநாயகன் FDFS தொடங்கும். ஆனால் உலகம் முழுக்க  இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு FDFS தொடங்கும் என்பதால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க ஒரே நேரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகின்றது என்றும் கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement