சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், எதற்காக க்ரிஷை தத்தெடுக்க முடியாது என்று உண்மையை மீனா அனைவரிடமும் சொல்லுகின்றார். அதன்படி நான் இப்போ க்ரிஷை தத்தெடுத்தால் அதற்குப் பின்பு எனக்கு குழந்தை கிடைத்ததும் அவனை அதே பாசத்தோடு பார்த்துக் கொள்ள முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.
அந்த பயத்தினால் தான் நான் க்ரிஷை தத்தெடுக்க விரும்பவில்லை என்று மீனா சொல்லுகின்றார். இதை கேட்டதும் விஜயா கைதட்டி முதன்முறையாக பாராட்டுகின்றார். என்னதான் இருந்தாலும் இந்த வீட்டுக்கு வாரிசு எங்களுடையதாகத்தான் இருக்க வேண்டும். நீ இந்த விஷயத்தில் சொன்னது சரிதான், எடுத்த முடிவு சரிதான் என்று மீனாவை பாராட்டுகின்றார்.
முத்துவும் இந்த விஷயம் எனக்கு தோணாம போச்சு.. இருந்தாலும் க்ரிஷ்க்கு நாங்க செய்ய வேண்டியதை செய்வோம் என்று சொல்ல, மீனாவும் அவரிடம் மன்னிப்பு கேட்கின்றார்.

அதன் பின்பு அருண் சீதாவிடம் எப்படியும் தப்பாகத் தான் சொல்லி இருப்பார் என்று சீதாவுக்கு மீனா போன் பண்ண, அவர் எடுக்கவில்லை. அதன் பின்பு முத்துவும் மீனாவும் அவருடைய அம்மா வீட்டுக்கு வருகின்றார்கள்.
அங்கு சீதாவும் வந்து தனக்கு முத்துவின் உறவு தேவை இல்லை என்று சொல்லுகின்றார். என்னுடைய புருஷனை இவர் எப்போதும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார். அதனால் எனக்கு இவருடைய உறவு தேவையில்லை என்று சொல்லுகின்றார். மீனா எவ்வளவு சொல்லியும் அவர் காது கொடுத்து கேட்கவில்லை. இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!