• Dec 25 2024

அமரன் வெற்றிக்குப் பின் SK25; புதிய புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.அமரன் வெற்றிக்குப்பின் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படமாகிய இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இந்த படத்துக்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது, மேலும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான Dawn Pictures அதன் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டு உறுதிப்படுத்தியது.மேலும் சிவகார்த்திகேயன் அவர்களும் தனது அடுத்த படத்தின் அப்டேட்டினை புகைப்படங்களுடன் வெளியிட்டு  உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த பதிவில் "திருச்சியில் ஒரு தீவிர சினிமா ரசிகனிலிருந்து #SK25 வரை கனவுகள் நிறைந்த அற்புதமான பயணம். என்னை நம்பி இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் என்றும் நன்றியுடன் இந்த அபாரமான படத்தை இன்று ஒரு நம்பமுடியாத குழுவுடன் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்"என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement