பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்றைய தினம் 70வது நாளில் கால் பதித்து உள்ளது. இதன்போது இன்று முதலாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் மேடைக்கு வந்த விஜய் சேதுபதி போன வாரத்தில் கேப்டன்சி எப்படி இருந்தது என்று சக போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்புகின்றார்.
இதன் போதும் முதன்முதலாக பதில் அளித்த மஞ்சரி, போன வாரம் இந்த வீட்ட வழி நடத்துவதற்கு கேப்டன் அவசியம் என்பதை தாண்டி, அந்த வாரம் முழுக்க கேப்டன வழிநடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இருந்தது.
மேலும் பேசிய ஜாக்குலின், அவர் இருக்கிறார் என்பதையே மறக்கடிக்க வைத்து விட்டார் என்றும், அதேபோல முத்துக்குமரனும் இதுவரை இருந்தவர்கள் மரியாதைக்குரிய இடத்தில் இருந்தார்கள். ஆனால் அண்ணன் மட்டும் கேப்டன்சியின் போது பரிதாபத்துக்குரிய இடத்தில் உள்ளார் என்று கூறினார்.
இறுதியாக விஜய் சேதுபதி ரஞ்சித்திடம், நீங்க ஷாப்டான ஆள், அன்பான ஆளு என்றா.. சௌந்தர்யாவை நல்லா மூஞ்சில வச்சு தைக்கணும் என்று சொன்னீங்க... அப்படி என்றால் இந்த கோபம் எங்கே இருந்து வந்தது என்று கேள்வி எழுப்பினார். மேலும் பத்தாவது வாரத்தில் கேப்டன் இருந்ததே தெரியவில்லை என்று ரஞ்சித்தை நிக்க வைத்து வறுத்தெடுத்து உள்ளார்.
Listen News!