• May 19 2025

KPY பாலா வரிசையில் இணைந்த சிறகடிக்க ஆசை நடிகர்.. சீரியலில் நடித்து பெற்ற சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது முத்து, மீனாவின் முதலாம் ஆண்டு திருமண கொண்டாட்டம் நடைபெறுகின்றது. 

இதில் கலந்து கொள்வதற்காக முத்துவின் பாட்டியும் கிராமத்திலிருந்து வந்துள்ளார். இன்று இடம்பெற்ற எபிசொட்டில் முத்து, மீனாவின் திருமண நாளுக்கு வந்திருந்த ஸ்ருதியின் அம்மா சுதா, மீனாவுக்கு தங்கவளையலை  போட்டு விடுகிறார். ஆனால் மீனா அதை அப்படியே கொண்டு போய் ஸ்ருதியின் கையில் போட்டு விடுகிறார். 


இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் நண்பராக நடிக்கும் செல்வம் தனது இன்ஸ்டா  பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னால் முடிந்த உதவியாக சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து பெற்ற சம்பளத்தை வைத்து ஏழைகளுக்கு உணவு கொடுத்துள்ளார்.


அதாவது முத்துவின் நண்பராக செல்வம் கேரக்டரில் நடித்பவர் தான் பழனியப்பன். இவர் இந்த சீரியலில் முத்துவுக்கு சிறந்த நண்பராக காணப்படுகிறார்.

தற்போது சிறகடிக்க சீரியலில் நடித்து கிடைத்த சம்பளத்தில், ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உணவுப்பொதிகளை வழங்கி உள்ளார். 

நடிகர் லோரன்ஸ் ராகவா, KPY பாலா வரிசையில் தற்போது இவரும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வது பலராலும் வரவேற்க தக்கது.


Advertisement

Advertisement