• Jul 27 2024

கங்குவா ரிலீஸ் எப்போ தெரியுமா? கன்ஃபார்ம் செய்த படக்குழு! வெளியான குட் நியூஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கார்த்திக் நடித்த சிறுத்தை, அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் மற்றும் ரஜினி நடித்த அண்ணாத்த ஆகிய  படங்களை இயக்கியவர் தான் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் தற்போது சூர்யா நடிக்கும் திரைப்படம் தான் கங்குவா.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நிஷா பதாணி, பாபி தியோன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட 3டி தொழில்நுட்பத்தில் உருவாகின்றது. இந்தப் படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முழுமையாக நிறைவடையும் என்று கூறப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அத்துடன் ஜூன் மாதம் இந்தியன் 2, செப்டம்பர் கோட் படம் ஆகியவை வெளியாக காத்திருக்கின்றன.


இந்த நிலையில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வெளியாகும் என தற்போது தகவல் கூறியுள்ளார் தனஞ்செயன்.

அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில், அதற்கு முதல் விக்ரம் நடித்த தங்கலான் படமும் வெளியாக பிளான் இருப்பதாக மேலும் தகவல் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement