• Jan 18 2025

டைவர்ஸ் ஆன ராபர்ட் உடன் மீண்டும் இணையும் வனிதா.. ஜோவிகாவுக்கும் ஓகே தான்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமார் 3 திருமணங்கள் செய்து மூன்று கணவர்களையும் டைவர்ஸ் செய்த நிலையில் அதன் பின்னர் அவர் நடன இயக்குனர் ராபர்ட் உடன் டேட்டிங்கில் இருந்தார் என்றும் இதனை அடுத்து அவரையும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ராபர்ட் உடன் மீண்டும் அவர் தற்போது இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகில் விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ராஜ்கிரண் நடித்த ’மாணிக்கம்’ உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். இதனை அடுத்து அவர் சில படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்த நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தார்.



நடிகை வனிதா கடந்த 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில் 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து 2012 ஆம் ஆண்டு பிரிந்தார். இதையடுத்து தான் அவர் நடன இயக்குனர் ராபர்ட் உடன் டேட்டிங்கில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தைக் கூட தயாரித்ததாகவும் செய்திகள் வெளியான.து அதன் பின்னர் அவர் ராபர்ட்டையும் பிரிந்தார்.

இந்த நிலையில் பிரிந்த ராபர்ட் உடன் தற்போது வனிதா விஜயகுமார் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு ’மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வனிதாவின் அப்பா அம்மாவாக ரவிகாந்த் மற்றும் ஷகிலா நடிப்பதாகவும் பிரேம்ஜி, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த படத்தில்  வனிதாவின் மகள் ஜோவிகா நடிக்கவில்லை என்றாலும் அவர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் இந்த படத்தை தயாரிப்பது ஆஸ்திரேலிய தொழில் அதிபர் என்றும் அவர் வனிதாவின் மிக நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement