• Jan 19 2025

நான் மியூசிக் டைரக்டர் ஆகாததற்கு காரணம் சிம்பு தான்! உண்மையை உளறிய பிரேம்ஜி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் பிரேம்ஜிக்கு என்று தனி மவுசு காணப்படுகிறது. இவரது காமெடிகள் வித்தியாசமாக மக்களை ரசிக்க வைக்கின்றன.

கிட்டத்தட்ட 45 வருடங்களாக சிங்களாக இருந்த பிரேம்ஜி அண்மையில் தான் இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது அவருடன் விதவிதமாக போட்டோ போடுவதையும் வீடியோ பகிர்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்..

இந்த நிலையில் தான் இசையை விட்டு நடிகராக காரணம் சிம்பு தான் என தெரிவித்துள்ளார்.


அதன்படி அவர் மேலும் கூறுகையில், எனக்கு மியூசிக் டைரக்டர் ஆகணும்னு தான் ரொம்ப ஆசை. ஆனால் நான் நடிகன் ஆனதற்கு சிம்பு தான் காரணம். 

சென்னை 28 படம் பண்ணும் போது சிம்பு தான் வந்து சார் இவனை ஒரு ரோல் நடிக்க வைங்க. வல்லவன்ல நடிச்சபோது செம்மையா நடிச்சிருக்காரு என்று சொன்னார். 

அப்புறம் சென்னை 28 நல்லா ரீச் ஆனதால் அப்படியே மியூசிக்ல இருந்து நடிப்புக்கு மாறிட்டேன். சரி நடிப்புதான் ஈசியா இருக்கே  நல்ல பேமெண்ட் கூட வருகிறது என்று அப்படியே விட்டுவிட்டேன்  என  தற்போது கூறியுள்ளார்.

Advertisement

Advertisement