சினிமா ரசிகர்களிடையே சமீபத்தில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்று "NON VIOLENCE". ஆனந்தன் கிருஷ்ணன் இயக்கத்தில், சிரிஷ் நடிப்பில், இசை மாயாஜாலக் கலைஞர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம், அதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்பே பெரும் கவனம் பெற்று வருகின்றது.

குறிப்பாக, இப்படத்தின் முதல் பாடல் "கனகா", வெளியான மூன்று நாட்களிலேயே 4.8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சாதனை, படத்திற்காக ரசிகர்களின் எதிர்பார்ப்பு எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதையும், யுவனின் இசை மீதான மக்களின் நேசத்தையும் நிரூபித்துள்ளது.
இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த “கனகா” பாடல், ரிலீஸ் ஆன முதல் சில மணி நேரங்களிலேயே ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருந்தது. லிரிக்கல் வீடியோ வடிவில் வந்த இந்தப் பாடலை ரசிகர்கள் மிகுந்த பாராட்டுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பாடலுக்கு நடிகை ஷ்ரேயா நடனமாடியிருப்பது கூடுதல் கவர்ச்சியைக் கொடுத்துள்ளது. அவரின் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் யுவன் இசை இணைந்ததால், பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இவ்வாறு “கனகா” பாடலின் மிகப்பெரிய வெற்றியால், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் உயர்ந்துள்ளது. அத்துடன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது படத்தின் ரிலீஸ் தேதியைத் தான். படக்குழுவினர் அதனை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!