‘காந்தாரா’ என்று சொன்னாலே, இந்திய சினிமா ரசிகர்கள் மனதில் எழும் பெருமையும், அந்த மந்திரமயமான உலகமும் இன்னும் மறக்க முடியாத ஒன்று. அந்த வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ‘காந்தாரா-2’ படம் 2025 அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியானது.

வெளியான முதல் நாளிலேயே வெகுஜன வரவேற்பை பெற்ற இந்த படத்தைச் சுற்றி பல சுவாரஸ்யங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றை தற்போது படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தாமே பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ரிஷப் ஷெட்டி, ‘காந்தாரா-2’ படத்திற்கான டப்பிங் குறித்து மனம் திறந்து பேசும்போது, நடிகர் மணிகண்டனை பற்றிய தனது எண்ணத்தை வெளிப்படையாக தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “மணிகண்டன் தான் என்னுடைய காந்தாரா-2 படத்திற்கு டப்பிங் பண்ணனும்னு நினைச்சன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், அவர் டப்பிங் அசோஸியேஷன் மெம்பரா இல்லை. அதனால் நானே கடிதம் கொடுத்து காசு கட்டி அவரை டப்பிங் செய்ய வைச்சேன்.” என்றார்.
இந்த ஒரு வரி, ரிஷப் ஷெட்டி தனிப்பட்ட முறையில் எவ்வளவு அக்கறையுடன் தனது படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் கவனிக்கிறார் என்பதையும், குறிப்பாக அவர் விரும்பும் திறமைகளை தன்னுடைய படத்தில் சேர்க்க எவ்வளவு முயற்சி எடுக்கிறார் என்பதையும் காட்டுகிறது.
அத்துடன் ரிஷப் ஷெட்டி, மணிகண்டனின் குரல் மற்றும் திறமையே 'காந்தாரா-2' க்கு சரியானதாக இருக்கும் என்பதை உணர்ந்ததால் தான் அதற்கான நடைமுறைகளைத் தானே மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!