• Nov 25 2025

ரஜினி–கமல் படத்திலிருந்து சுந்தர்.சி விலகல்.. இது விபத்தல்ல.. திருப்பம்.! வைரமுத்து பகீர்

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்றாக இருப்பது,  ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க இருந்த மிகப்பெரிய படத்திலிருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகிய விவகாரம்.

லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தக் கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.


சில நாட்களாக, இந்த முடிவின் காரணம் குறித்து பல்வேறு ஊகங்கள், வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இந்நிலையில், புகழ்பெற்ற கவிஞர் வைரமுத்து வெளியிட்ட சமீபத்திய கருத்து தற்போது திரையுலக கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் கூறியதாவது, “சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இந்தியக் கலையுலகின் இரு பெரும் ஆளுமைகள். அவர்கள் இணைந்து இயக்குவது என்பது அட்லாண்டிக்கும் பசிபிக்கும் ஆரத் தழுவிக்கொள்வது போன்றது. இயக்குநர் சுந்தர்.சி இப்படத்திலிருந்து விலகியது ஒரு விபத்தல்ல; திருப்பம். இதில் யாரும் கள்ளச் சந்தோஷம் அடைய வேண்டாம்.” என்றார் வைரமுத்து. 


அவரது இந்த கூற்று சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது. மேலும், சில விமர்சகர்களிடையே  சுந்தர்.சி இப்படத்திலிருந்து விலகியதால் என்ன திருப்பம் நிகழவுள்ளது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

Advertisement

Advertisement