பான் இந்திய அளவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தின் முதலாவது பாகம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வரை வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் 3 வருடங்களுக்குப் பிறகு இன்றைய தினம் வெளியாகி உள்ளது.
புஷ்பா படத்தின் முதலாவது பாகம் 1000 கோடி ரூபாயை வசூலித்த நிலையில் இதன் இரண்டாவது பாகம் 2000 கோடியை வசூலிக்கும் என்று பலரும் கூறியிருந்தார்கள். இந்த படத்திற்கு அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதும் கிடைக்கும் என பலரும் பாராட்டி உள்ளார்கள்.
சுமார் 12000 திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியான முதல் நாளையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது.
d_i_a
இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புஷ்பா 2 பற்றி தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், வட இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது. பாகுபலி படத்திற்கு பிறகு ஆர்ஆர்ஆர், புஷ்பா 1 போன்றவை வசூலில் சாதனை படைத்துள்ளன. அதில் தற்போது புஷ்பா 2 திரைப்படமும் இடம் பிடித்துள்ளது. இதில் ஒவ்வொருவரின் நடிப்பும் பட்டையை கிளப்பி உள்ளது.
இந்த படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் உள்ளார்கள். அதில் ராஷ்மிகா, ஸ்ரீ லீலா என்ற கூறிய பயில்வான், மூன்றாவது ஹீரோயின் யார் என்றால் அல்லு அர்ஜுன் என்று கூறியுள்ளார். அவர் லேடி கெட்டப்பில் ஒரு பாடலுக்கு பட்டையை கிளப்பி உள்ளார்.
இந்த படத்தின் மூலமாக அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி ஷேர் வரப்போகுது. இதனால் அல்லு அர்ஜுன் இந்திய சினிமாவில் டாப் நடிகராக மாறப் போகின்றார். இந்த படத்தில் ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த படத்தின் பாடல்களும், பேக்ரவுண்ட் ஸ்கோர் என்பன மிகச் சிறப்பாக வந்துள்ளது. இதனால் புஷ்பா 2 திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் என பயில்வான் தெரிவித்துள்ளார்.
Listen News!