• Mar 14 2025

கவின் என்ன அவளோ பெரிய ஆளா? வளரும் போதே இப்படியா! அதிருப்தியில் நெட்டிசன்ஸ்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் கவின் தற்போது ஒரு சில படங்களில் நடித்து சினிமாவில் வளர்ந்து வருகிறார். பீட்சா படத்தில் தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கிய இவர் இன்றுவரை 10 படங்களில் நடித்திருக்கிறார். முதன்முதலாக ஹீரோ கதாபாத்திரம் நேற்று நடித்த படம் “நட்புன்னா என்னன்னு தெரியுமா.


இந்த படத்திற்கு பிறகு லிப்ட், டாடா , ஸ்டார், பிளடி பக்கர் என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்தார்.  இதில் லிப்ட் டாடா என இந்த இரண்டு படங்களும் அவரை சினிமாவில் ஒரு முக்கியமான ஹீரோவாக மாற்றியது. ஆனால் தற்சமயம் வெளிவந்த பிளடிபக்கர் எல்லாத்தையும் கெடுத்து விட்டது.


நடிகர் கவின் நடிப்பையும் தாண்டி சூட்டிங் ஸ்பாட்டில் பல அலப்பறைகள் செய்து வருகிறாராம். குறிப்பாக சினிமாவில் தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் மற்றவரிடம் காட்டிக் கொள்கிறாராம். பாடல் காட்சிகளுக்கு நானே கோரியோகிராப் செய்கிறேன்என்று சொல்வாராம். 


இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் இவருக்கு மேனேஜராக செயல்பட்டு கொண்டிருப்பவர் குபேந்திரன். இவர்தான் இப்பொழுது அலட்சியமாக செயல்பட்டு வருகிறாராம். கவினை தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம்.


குபேந்திரன் மூலமாகத்தான் கவினை அணுக வேண்டுமாம். ஆனால் குபேந்திரன் போன் பண்ணினால் எடுப்பதே கிடையாதாம். இதனால் வளர்ந்து வரும் போதே இப்படியா பெரிய ஹீரோவானால் அவ்வளோதான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 




Advertisement

Advertisement