தமிழ் சினிமாவின் தனித்துவமான குணச்சித்திர நடிகையாக மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை வடிவுக்கரசி. பல தலைமுறைகளுக்காக பன்முகக் கதாபாத்திரங்களில் நம்பிக்கையுடன் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவர், இன்றைய சமூக ஊடகத்தின் வளர்ச்சியால் திரைப்படத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, Reels செய்வதன் மூலம் புகழ்பெறும் சில பெண்கள், “நடிகை” என அழைக்கப்படுவதைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தற்போது திரையுலகில் விவாதிக்கப்படும் முக்கியமான தலைப்பாக காணப்படுகின்றது.
அதில் அவர் கூறியதாவது, "இப்போ ரீல்ஸ் போட்டா, யாராக இருந்தாலும் ஹீரோயினா ஆகலாம் என்ற நிலைமை. ஆனா அவங்களுக்கு ஒரு டயலொக் கொடுத்தீங்கனா சொல்ல தெரியாம திணறுறாங்க. நடிக்கத் தெரியல, கேரக்டருக்கு நம்பிக்கை கொடுக்கணும் என்றே தெரியல" எனத் தெரிவித்தார்.
மேலும் நடிப்பு என்பது வெறும் அழகு அல்ல அது ஒரு உணர்வு என்றார். இந்தக் கலையை மதிக்காமல், திரை உலகை விளையாட்டு மாதிரி எடுத்துக்கொள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
வடிவுக்கரசி பேட்டியில் கூறியவை வெறும் விமர்சனமல்ல அது ஒரு நாடக உலகத்துக்கான விழிப்புணர்வாகக் காணப்படுகின்றது. மேலும் சமூக ஊடகங்களில் வளர்வது தவறு அல்ல அந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்துவது தான் முக்கியம் என்றார்.
Listen News!