இயக்குனர் சங்கத் தேர்தலில் கடந்த முறை விக்ரமன் அணி
மற்றும் பாக்யராஜ் அணி என பரபரப்பாக
மோதிய நிலையில் இந்த முறை ஒற்றுமையுடன்
போட்டி இன்றி தலைவர், பொருளாளர், செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை இயக்குனர் சங்க
தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்கே செல்வமணி இந்த முறை போட்டியிடவில்லை
என ஒதுங்கி விட்டதாகவும் தான் திரைப்படம் இயக்க
இருப்பதால் என்னால் இயக்குனர் சங்க பொறுப்பை ஏற்றுக்
கொள்ள முடியாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
அதேபோல் பாக்யராஜ் இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட
விரும்பவில்லை என்றும் தான் ஏற்கனவே எழுத்தாளர்
சங்கத்தில் பொறுப்பில் இருப்பதால் அந்த பொறுப்பே எனக்கு
போதும் என்று அவர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து இயக்குனர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் தலைவராக ஆர்வி உதயகுமார், பொருளாளராக சரண் மற்றும் செயலாளராக
பேரரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த முறை ஆர்கே செல்வமணியை
எதிர்த்து பாக்யராஜ் போட்டியிட்ட நிலையில் இந்த முறை ஆர்வி
உதயகுமாரை எதிர்த்து பார்த்திபன் போட்டியிட திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் இந்த முறை போட்டியின்றி
தேர்வு செய்ய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என
பாரதிராஜா உட்பட சில முக்கிய இயக்குனர்கள்
கேட்டுக் கொண்டதை எடுத்து பார்த்திபன் போட்டியில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து துணைத் தலைவர் உட்பட சில பதவிகளுக்கு மார்ச்
16ஆம் தேதி தேர்தல் நடைபெற
இருப்பதாகவும் அதன் பிறகு தேர்வு
செய்யப்பட்ட அனைவரும் பொறுப்பேற்று கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இயக்குனர் சங்கத் தேர்தலில் அனைத்து இயக்குனர்களும் ஒற்றுமையாக போட்டியின்றி தலைவர் உட்பட சில நிர்வாகிகளை தேர்வு
செய்யப்பட்டுள்ளது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
Listen News!