• Jan 19 2025

ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வந்த விஜயா.. ஆடிப்போன ஸ்ருதி! அடிமேல் அடி வாங்கும் முத்து

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், விஜயாவுக்கு face பேக் போட்டுவிட்டு காலையில் அதை கழுவுமாறு சொல்கிறார் ரோகிணி. மறுபக்கம் ஏசியை  குறைக்குமாறு ரவி சொல்ல, இல்ல எனக்கு காணாது என ஸ்ருதி ஏசியை கூட்ட,  இறுதியில் இருவரும் ஏசியை ஒன் பண்ணி ஆப் பண்ணி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனால் கரன்ட்  கட் ஆகுது.

இதை அடுத்து மீனா மெழுகுதிரி கொளுத்தி வெளியே வர, அந்த நேரத்தில் அங்கு வந்த முத்து மீனாவின் அழகை பார்த்து ரசிக்கிறார். அந்த நேரத்தில் இருட்டுக்குள் விஜயா வெளியே வர எல்லாரும் பேய் என கத்தி குளறுகிறார்கள். 


அதன்பின், பக்கத்து வீட்டுல கரண்ட் இருக்குது ஆனா எங்க வீட்லதான் இல்லையென்று மெயின் போர்டுல செக் பண்ண செல்கிறார்கள். இதை அடுத்து கரண்ட் வந்ததும், நம்ம வீட்டுல  தானா கரண்ட் போகல, யாரோ சுவிட்ச ஆன் பண்ணி ஆஃப் பண்ணி இருக்கீங்க, அது யாருன்னு முத்து கேட்க, ரவியும் ஸ்ருதியும் அமைதியாக இருக்கின்றார்கள்.

இதை அடுத்து விஜயா முகம் கழுவி விட்டு வர, ரூமில் ஸ்ருதியும்  ரவியும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை கவனிக்கிறார்.

இதை அடுத்து மீனாவும் முத்துவும் ஆட்டோவில்,  பூக்கடைக்கு பூக்களை வாங்க செல்கிறார்கள். அதில் நோ பார்க்கிங்கில்  ஆட்டோவை நிறுத்தி வைத்ததாக ட்ராபிக் மேன் முத்துவிடம் ரூ.500 அபராதம் கேட்கிறார். அதற்கு மீனா ட்ராபிக் காரருடன் வாக்குவாதம் செய்கிறார்.

அதன் பின்னர் ஸ்ருதியும் ரவியும் சண்டை போட்டவாரே வெளியே செல்ல, விஜயா ஸ்ருதியிடம் ரவிக்கும் உனக்கும் என்ன பிரச்சனை அப்படி என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement