• Dec 04 2024

ரோகிணி உண்மையாவே பாவம் தான்..மீனாக்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், மீனாவுக்கு ஆர்டர் வந்த சந்தோஷத்தில் கறி வாங்க சிக்கன் கடைக்கு செல்கின்றார். அது மலேசியா மாமாவின் கறிக்கடை. ஆனால் மீனாவை பார்த்த கறிக்கடைக்காரர் தலையில் துண்டை போட்டு மறைத்துக் கொள்கின்றார். இதனால் மீனா அவரை அடையாளம் காணவில்லை.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனா பிரியாணி செய்து கொண்டாடுகிறார். ஆனால் அதனை சாப்பிட முடியாமல் விஜயாவும் மனோஜூம் கவலையில் இருக்கின்றார்கள். ரோகிணி தனக்கு பசிக்குது சாப்பிட போகின்றேன் என்று சொல்லுகின்றார். விஜயாவும் இன்னைக்கு சாப்பிட்டுட்டு நாளைக்கு விரதம் இருப்பமா என்று மனோஜிடம் கேட்க, வேணாம் சாமி குத்தமாயிடும் நாளைக்கு பெரிய ஹோட்டலுக்கு கூட்டிப் போகின்றேன் என்று விஜயாவை சமாதானப்படுத்துகிறார்.

d_i_a

அதன் பின்பு தான் பிரியாணி சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்வதாக சொல்ல, நீயும் மீனாவும் கதைக்கிறது இல்லையே பிறகு என்ன என்று விஜயா கேட்க, அதற்கு அது வேற இது வேற சாப்பாடு தான் முக்கியம் என்று ஸ்ருதி பதிலடி கொடுக்கின்றார்.


மறு பக்கம் வித்யா வீட்டிற்கு வந்த கறிக்கடைக்காரர் ரோகினியை அழைத்து நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லுகின்றார். இதனால் உங்களுடைய கடையை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் அப்படி இல்லை என்றால் கடையை பூட்டி வையுங்கள் என்று ரோகினி சொல்கின்றார்.


இதை கேட்ட கறிக்கடைக்காரர் தன்னால் அப்படி எல்லாம் பண்ண முடியாது. தனது கஸ்டமர், குடும்பம், உறவுகள் எல்லாம் இங்கே தான் உள்ளது. நீங்க மீனாவை இனி அந்த கடைக்கு வரவிடாமல் பண்ணுங்கள். நான் மாட்டினால் நிச்சயம் உங்களுடைய பெயரை தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி சொல்லுகின்றார்.

இதனால் ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் சிரிக்கின்றார். ஏன் சிரிக்கின்றாய் என்று வித்யா கேட்க, தனது நிலையை நினைத்து சிரிப்பதாக சொல்கின்றார். 

அதன் பின்பு மீனா பெரிய தொழிலதிபராக வேண்டும் என்று முத்து காரில் வரும்போது கதைத்துக் கொண்டு வந்ததோடு மீனாவின் வளர்ச்சிக்காக அவருக்கு பிசினஸ் கார்ட் அடித்து கொடுக்கின்றார். இதனால் தான் உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலி என்று மீனா எமோஷனல் ஆகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement