தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. கிட்டத்தட்ட பலரின் இரண்டு வருட உழைப்புக்கு பிறகு இந்த படம் வெளியானது.
சுமார் 400 கோடி ரூபா பட்ஜெட்டில் கங்குவா திரைப்படம் எடுக்கப்பட்டது. பழமையான வரலாற்று கதை அம்சத்தை கொண்ட படமாகவும் தற்காலத்தில் நிகழும் தொழில்நுட்பங்களை கொண்ட கதையாகவும் இரண்டு வேறுபட்ட கதை களத்துடன் இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யா.
d_i_a
இந்த படத்திற்கு முதல் நாள் காட்சியின் ஆரம்பத்தில் அமோக வரவேற்பும் பாராட்டும் சூர்யாவுக்கு கிடைத்தது. ஆனால் அதைத் தொடர்ந்து படத்தை பார்த்த பலரும் நமது நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை முன் வைத்தார்கள். இதன் காரணத்தினால் இந்த படம் போகப்போக படுவிமர்சனத்திற்கு உள்ளானது.
இதன் காரணத்தினால் கங்குவா திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கங்குவா திரைப்படம் 2000 கோடிகளை வசூலிக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ஆனாலும் கங்குவா திரைப்படம் 200 கோடிகளை கூட எட்டவில்லை.
இந்த நிலையில், கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை அமேசன் பிரைம் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!