• Jan 18 2025

யாரும் எதிர்பாராத விஷயத்தை செய்த ஈஸ்வரி.. கோபியை விட்டுச் செல்லும் ராதிகா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா கோபியை பார்த்துக் கொண்டு வெளியே நிற்க, அங்கு வந்த ஈஸ்வரி நீ இன்னும் கிளம்பவில்லையா? என்ட பிள்ளை உசுரோடு இருக்கிறது உனக்கு பிடிக்கவில்லையா? நீ எப்போ எங்க குடும்பத்துல வந்தியோ அன்னைக்கே எங்க குடும்பம் நாசமா போயிட்டு என்று ராதிகாவுக்கு சரமாரியாக திட்டுகின்றார்.

அதன் பின்பு அங்கு வந்த நேர்ஸிடம் தான் டாக்டரிடம் கதைக்க  வேண்டும் என்று ராதிகா கேட்க, டாக்டரிடம் விசிட்டர்ஸ் எல்லாம் கதைக்க முடியாது. எல்லா விஷயமும் அவங்க வீட்டாருக்கு சொல்லியாச்சு என்று சொல்லுகின்றார். மேலும் அந்த நேரத்தில் கோபிக்கு மருந்து வாங்க பில்லை கொடுக்க, அதனை பாக்கியா தான் மனைவி அவரிடம் கொடுக்குமாறு நேர்ஸ் சொல்லுகின்றார்.

d_i_a

இதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகின்றார். அதன்பின் நேர்ஸிடம் விசாரித்த ராதிகா, பாக்யா அவருடைய மனைவி என்று சொன்னாங்களா என்று கேட்க, நேர்ஸும் ஆமா என்று நடந்தவற்றை சொல்லுகின்றார்.


இதை தொடர்ந்து ராதிகா தனியாக நின்று அழுது கொண்டு இருக்க, மீண்டும் ஈஸ்வரி வந்து நான் உனக்கு கோவமா சொல்லல இங்க கோபியை பார்த்துக் கொள்ள எல்லாரும் இருக்கின்றோம். நீ வீட்டுக்கு கிளம்பு என்று சொல்லுகின்றார். இதனால் ராதிகா வேறு வழியில்லாமல் வெளியே கிளம்பி செல்கின்றார்.

ராதிகா வெளியே நின்று தனியாக அழுது கொண்டிருக்க அவருக்கு பாக்யா ஆறுதல் சொல்ல போகின்றார். ஆனாலும் மீண்டும் எல்லாரும் ஒன்று சேர்ந்துட்டீங்க.. நான் மட்டும் தனியாக நிற்கின்றேன் என்று ராதிகா அழுது புலம்புகின்றார். பாக்கியா  நடந்தவற்றை எடுத்துச் சொல்ல முயன்ற போதும் நீங்க இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். எதுவும் என்றால் சொல்லுங்கள் என்று ராதிகா கிளம்பி செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement