• Jul 09 2025

He is Everything..! – காதலை ஒப்புக்கொண்ட ராஷ்மிகா..! இன்ஸ்டாவில் வைரலான வீடியோ..

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

குபேரா  Pre Release விழாவின் போது நடுவர்கள் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், தெலுங்கு திரைப்பட உலகின் பிரபலமான நடிகரான விஜய் தேவரகொண்டா பற்றிய கேள்விகளை எழுப்பினார். ஆரம்பத்தில் சிரிப்புடன் பதிலளிக்க தயங்கிய ராஷ்மிகா, தொடர்ந்து "He is everything!" என்று கூற, மேடையில் ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.


இவர்களுடைய நட்பு மற்றும் உறவு குறித்து பல வருடங்களாகவே பல்வேறு சமூக ஊடகங்களில் ஊகங்கள் பரவிவந்தன. இருவரும் இணைந்து நடித்த 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' போன்ற படங்களுக்குப் பிறகு, அவர்களுக்கு இடையிலான உறவு குறித்து அதிகமாக பேசப்பட்டது. இருவரும் எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த "He is everything!" என்ற பதில் முடிவாக காணப்படுகின்றது. 


இந்த நிகழ்வு நடந்ததிலிருந்து சில மணி நேரங்களிலேயே, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்துவிட்டது. டுவிட்டர், Instagram மற்றும் YouTube Short-களில் #Rashmika #VijayDeverakonda #HeIsEverything என்ற ஹாஷ்டாக்குகள் ட்ரெண்டாக ஆரம்பித்தன. ரசிகர்கள் இவ்விருவரும் "கியூட் ஜோடி", "ரியலாகவே கல்யாணம் பண்ணிடுங்க ப்ளீஸ்" என்று கமெண்ட்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement