• Jul 09 2025

என்ன vibeடா சாமி..! மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் குத்தாட்டம் போட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஸ்டைலான படங்கள் மற்றும் கதையமைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். அத்தகைய இயக்குநர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், வேற லெவல் டான்ஸர் என தன்னை நிரூபித்துள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற ஏ.ஆர். முருகதாஸ் மகளின் பூப்புனித நீராட்டு விழா (Puberty Function) ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு எளிமையான குடும்ப விழாவாக இருந்தாலும், அதில் நடந்த ஒரு காட்சிதான் இணையத்தை வைரலாக்கி வருகின்றது.


விழாவின் மேடையில் சூர்யாவின் ரெட்ரோ படம் மூலம் வைரலான "கனிமா" என்ற பாடலுக்கு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மேடையில் நின்று குத்தாட்டம் போட்டுள்ளார். வீடியோ இணையத்தில் வெளியாகிய கொஞ்ச நேரத்திலேயே, Twitter, Instagram, TikTok போன்ற சமூக ஊடகங்களில் விரைந்து பரவத் தொடங்கியது. 


ரசிகர்கள் இதை ஒரு “Rare Moment” எனக் குறிப்பிட்டு வருவதுடன் சிலர்," முருகதாஸை இதுவரைக்கும் சிறந்த இயக்குநராகத் தான் பார்த்துள்ளோம். தற்பொழுது அவர் சிறந்த டான்ஸர் என்பதையும் நிரூபித்துவிட்டார்." என கமெண்ட்ஸில் புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement