சமூக ஆரோக்கியம் என்பது அரசியல் அறிவை பொறுத்துள்ளது என்று சொல்வார்கள்.நாம் கண்கொண்டு காண முடியாத கடவுளை போல அரசியலும் எங்கும் நிறைந்திருக்கிறது.இவ்வாறிருக்கையில் தமிழ் திரையுகில் அரசியல் பேசும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா.ரஞ்சித்.
2012 ஆம் ஆண்டளவில் 'அட்டகத்தி' திரைப்படம் மூலம் அறிமுகமான பா.ரஞ்சித் அடுத்து இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அரசியலை பேசும் வெற்றி இயக்குனராக உருவெடுத்தார்.தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து அடுத்தடுத்து 'கபாலி' , 'காலா' படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் "தங்கலான்" படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் “நான் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம் ரஜினி சாருக்கு ரொம்ப பிடிக்கும். மெட்ராஸ் பிடித்ததால்தான் 'கபாலி' படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கினார். என்னுடைய அரசியல் அவருக்கு ரொம்ப பிடிக்கும். 'கபாலி' வெற்றியடைந்த பின் 'காலா' வாய்ப்பு கொடுத்தார்!" என குறிப்பிட்டிருந்தார்.
Listen News!