பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியன் கதிரைப் பார்த்து பொண்டாட்டி உறுதுணையா இருந்த படியா தான் ஜெயிச்ச என்று சொன்னதை கோமதி தன்னை குத்திக் காட்டத் தான் அப்புடி சொன்னீங்களா என்று கேட்கிறார். அதுக்கு பாண்டியன் நான் அப்புடி எல்லாம் சொல்லல என்கிறார். மேலும் கோமதி மருமகள்கள் ஏதாவது செய்தால் பாராட்டுறீங்க எனக்கு மட்டும் ஒன்னுமே சொல்லுறீங்க இல்ல என்று கோபமாக கேட்கிறார்.
இதனை அடுத்து கதிரும் ராஜியும் வீட்டுக்கு லேட்டா வந்து சாப்பிடுறதைப் பார்த்த கோமதி எதுக்காக இவ்வளவு நேரம் நின்றனிங்க என்று கேட்டு பேசுறார். பின் கோமதி மீனாவை கூப்பிட்டு நான் இண்டைக்கு மாமாவ பேசிப்போட்டேன் என்கிறார். அதைக் கேட்ட மீனா அப்ப இனிமேல் நல்ல படியா தூங்குவிங்க போல என்கிறார்.
அதனை அடுத்து மீனா தனியா போய் இருக்கிறது நல்ல ஐடியா என்கிறார் கதிர். அதைக் கேட்ட ராஜி அக்கா அப்புடி எல்லாம் போக வேணாம் என்று சொல்லுறார். மறுபக்கம் மயில் சரவணனை காணேல என்று தேடுறார். பின் வீட்டிற்கு வந்த சரவணன் மயிலோட அப்பா கடைக்கு வந்ததுக்கு பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட மயில் இனிமேல் எங்கட அப்பா அந்தக் கடை பக்கமே வரமாட்டாரு என்று சொல்லுறார்.
மறுநாள் காலையில பழனி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாண்டியன் வேலை ஒன்னு இருக்கு செய்யுறியா என்று கேட்கிறார். அதைக் கேட்ட சுகன்யா அந்த வேலையை அவரே செய்யமாட்டாரா என்று கோபமாக பழனி கிட்ட கேட்கிறார். பின் சுகன்யா சக்திவேல் வீட்ட போய் பாண்டியன் சொத்தை பிரிச்சுக் கொடுத்திட்டார் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!