விஜய் டிவி தொலைக்காட்சி பிரபலமான நாஞ்சில் விஜயன் தொடர்பான சர்ச்சைகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதாவது நடிகர் நாஞ்சில் விஜயன், விஜே வைஷ்ணவிக்கு இடையிலான பிரச்சனை சின்னத்திரையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நாஞ்சில் விஜயன் தன்னுடன் நெருக்கமாக இருந்தார், உறவில் ஈடுபட்டார், ஆனால் இப்போது கண்டு கொள்வதில்லை என விஜே வைஷ்ணவி குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அதன்பின் ஒரு கட்டத்தில் அவர் கொடுத்த போலீஸ் புகாரையும் வாபஸ் வாங்கி இந்த பிரச்சனையில் இருந்து விலகினார்.
இந்த நிலையை, நாஞ்சில் விஜயன் தற்போது தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை உறுதிப் படுத்தியுள்ளார்.
மேலும் அதில், 'சின்ன சின்ன சண்டைகள் வரும்,
பெரிய பெரிய புன்னகைகளாக மாறும்...
உலகம் விலகினாலும் பரவாயில்லை,
நீ என் பக்கம் இருந்தால் அதுவே பரிபூரணமாம்..' என கேப்ஷன் போட்டு பதிவிட்டுள்ளார்.
Listen News!