சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜின் நண்பர் சந்தோஷ், ராணி வீட்டில் நடந்த சம்பவங்களை பற்றி முத்துவிடம் உளறுகிறார். அதன்பின் முத்து ராணி வீட்டுக்கு செல்லுகிறார்.
அங்கு நான் உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன். உனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மனோஜை சும்மா விடக்கூடாது என்று சொல்லுகிறார். அதனால் தன்னுடன் வீட்டுக்கு வந்து உண்மையை சொல்லுமாறு அழைக்கிறார்.
எனினும் ராணி வேண்டாம். அவர் பாவம் என்று சொல்லுகிறார். அவருடைய புருஷனும் வர மாட்டேன் என்று சொல்லுகிறார். ஆனால் முத்து அவர்களை நைஸாக பேசி வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.
அங்கு ராணி வீட்டில் மனோஜ் அடி வாங்கியதை சொல்லுகிறார். அதனை விஜயா நம்பவில்லை. பின் தான் ராணிக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன், மனோஜ் மீது தான் தப்பு என முத்து சொல்லுகிறார்.
அந்த நேரத்தில் ரோகிணி இவர்கள் மீது தான் தப்பு. கடையில் இருந்து காசை திருடிட்டு போனாங்க என்று சொல்லி முந்துகிறார். அதற்கு ராணியின் புருஷன் மனோஜ் பேசிய வீடியோவை காட்டுகிறார்.
இறுதியில் அந்த பொண்ணு கிட்ட மனோஜ் தப்பா நடக்க முயற்சி செய்து, அதனை எல்லாரும் பார்த்து இருக்காங்க. அதனால இனி இதான் உன்ட மாமியார் வீடு என சொல்லுகிறார். இதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
Listen News!