சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தைச் சுற்றி சமீபமாக பல மாற்றங்கள் தொடர்ந்து வெளிவந்து வருகின்றன. அந்தப் படத்தை இயக்குவதற்காக முதலில் இணைந்திருந்த இயக்குநர் சுந்தர்.சி திடீரென விலகிய செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அதிகாரபூர்வ விளக்கம் ஏதும் வெளிவராத நிலையில், இறுதியாக அந்தப் படத்தின் தயாரிப்பை மேற்கொள்கிற நடிகர் கமல்ஹாசன் தானே இது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

ரஜினி – சுந்தர்.சி கூட்டணியில் உருவாகவிருந்த படத்திலிருந்து, சுந்தர்.சி விலகிய நிலையில், "சில தவிர்க்க முடியாத காரணங்களால், கனத்த இதயத்துடன் ரஜினி–கமல் திட்டத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.." எனவும் சுந்தர்.சி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் முத்திரை வைப்பதற்காக கமல்ஹாசன் தானே விளக்கம் அளித்துள்ளார். தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் கூறிய கருத்து படக்குழுவின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

சுந்தர்.சி விலகிய விவகாரம் குறித்து கமல்ஹாசன், "எனது கருத்து என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பது தான் எனக்கு ஆரோக்கியமானது. ரஜினிக்கு பிடிக்கும் வரை கதை கேட்டுக் கொண்டே இருப்போம். புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. கதை நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவு தான்." எனக் கூறியுள்ளார்.
இந்த ஒரு பதிலே ரசிகர்களுக்கு பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது. கமலின் இந்த உரையிலிருந்து, படக்குழுவின் தற்போதைய நிலை பற்றிய சில முக்கிய அம்சங்கள் வெளிப்படுகின்றன.
Listen News!