தமிழ் திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த துல்கர் சல்மான் – பாக்யஸ்ரீ இணையும் ‘காந்தா’ திரைப்படம், முதல் நாளிலேயே வசூலில் பெரிய சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

திரைப்படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, உலகளவில் ரூ.10.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் நவம்பர் 14, 2025 அன்று உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல நகரங்களில் சிறப்பாக ஓடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘காந்தா’ ஒரு தீவிரமான த்ரில்லர்-டிராமா வகையைச் சேர்ந்த படம். துல்கர் சல்மான் இதுவரை செய்யாத விதமான கதாபாத்திரத்தை ஏற்று, மாறுபட்ட உடல் மொழி மற்றும் மனநிலையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.

அவருக்கு இணையாக பாக்யஸ்ரீ மிகுந்த நுணுக்கத்துடன் தனது வேடத்தை வெளிப்படுத்தி, படத்திற்கு உணர்ச்சி ரீதியான வலிமையை கூட்டியுள்ளார். இந்நிலையில், முதல் நாள் வசூலில் இத்தகைய சாதனை படைத்திருப்பது, இந்த ஆண்டின் மிகச் சிறந்த ஓபனிங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
Listen News!