விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என்பவற்றுக்கு மேலாக அதில் தொகுப்பாளர்களாக காணப்படுபவர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்கள். அதிலும் முக்கியமான தொகுப்பாளினியாக பிரியங்கா காணப்படுகின்றார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளினியாக பிரியங்கா பல ஆண்டுகாலமாக பணியாற்றி வருகின்றார். சமீபத்தில் இவருக்கும் மணிமேகலைக்கும் இடையில் மிகப்பெரிய ரகளையே ஏற்பட்டு இருந்தது.
குக் வித் கோமாளி சீசன் 5ல் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் பிரியங்கா. அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டார் மணிமேகலை. ஒரு கட்டத்தில் பிரியங்கா தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக செயல்படுகின்றார்.. எனக்கு அவர் இடையூறாக இருக்கின்றார் என்று குற்றச்சாட்டை முன்வைத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார் மணிமேகலை.
இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு ஆரம்பத்தில் பிரியங்காவுக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. எனினும் நாளடைவில் பிரியங்கா மீது எந்த தப்பும் இல்லை என்பது போலவே அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க தொடங்கினார்கள்.
இந்த நிலையில், ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் நிலையில் அதில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரான ஸ்ரீ தேவாவும் கலந்து கொண்டுள்ளார். இதன்போது அவர்கள் செய்த ரீல்ஸ் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதாவது ராயன் படத்தில் பேமஸ் ஆக காணப்பட்ட பாடலுக்கு இருவரும் இணைந்து ஆக்சன் போட்டு உள்ளார்கள். தற்போது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரீ தேவ்.. இதோ அந்த வீடியோ..
Listen News!