சமீபத்தில் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், கானா பாடகி இசைவாணி பாடிய ஒரு பாடல் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல், ஐயப்பன் மற்றும் அவரின் வழிபாட்டு முறைகள் குறித்து நெருக்கடியான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக கூறப்பட்டு, தமிழகத்திலும் கேரளத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக, இந்த பாடலில் ஐயப்ப பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களை குறைவாகவும், அவமதிக்கத்தக்க வகையிலும் வர்ணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகியதை தொடர்ந்து, கானா இசைவாணி மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நீலம் பண்பாட்டு மையத்தின் மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டது.அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினரும், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக இசைவாணி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக புகாரளித்திருந்தனர்.
தற்போது இசைவாணி தனது சமூக ஊடகப் பக்கத்தில் விளக்கமும் நன்றியுமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்."இக்கட்டான சூழலை எதிர்த்து நின்று, என் மீது நம்பிக்கை வைத்து தோழமையாக கை நீட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஜெய் பீம்!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!