• Feb 16 2025

கல்யாணத்துக்கு பிரியா வாரியர் போட்ட கண்டிஷன்.? வெளியானது 'NEEK' படத்தின் புதிய ப்ரோமோ

Aathira / 16 hours ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ராயன் படத்தை தொடர்ந்து டைரக்ஷன் பக்கம் திரும்பிய தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகின்றார். இந்த படம் காதல் கதையாக உருவாகியுள்ளதோடு பெப்ரவரி 21 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸுக்கும் தயாராக உள்ளது.

தனுஷ் தனது சகோதரி மகனான பவிசை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகரான மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளார்கள்.

இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட் அடித்தன. குறிப்பாக கோல்டன் ஸ்பிரே பாடல் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதள பக்கங்களிலும் ட்ரெண்டிங் ஆக காணப்பட்டது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.


இந்த படத்தில் ஹீரோ தற்போதைய காதல், மற்றும் முன்னாள் காதலியின் திருமணம் ஆகிய இரண்டுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிப்பதை தான் கதைக்களமாக கொண்டு இயக்கியுள்ளார் தனுஷ். ஆகவே இந்த படம் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் இருந்து புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி  உள்ளது. இதோ அந்த ப்ரோமோ..

Advertisement

Advertisement