• Feb 16 2025

நடிகர் பாலகிருஷ்ணாவின் பரிசால் வாயடைத்துப் போன இசையமைப்பாளர்...!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பாலகிருஷ்ணா, ‘டாக்கு மஹாராஜ்’  என்ற படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இசையமைப்பாளர் எஸ். தமனுக்கு ஒரு பிரமாண்டமான பரிசு வழங்கியுள்ளதாக டுவிட்டரில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில்  பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது, குறிப்பாக தமனின் இசைக்காக ரசிகர்களிடையே பெரும் பாராட்டும் கிடைத்துள்ளது. இந்த வெற்றியை ஒட்டி, தனது நன்றியை வெளிப்படுத்தும் வகையில், நடிகர் பாலகிருஷ்ணா, தமனுக்கு ஒரு  Porsche காரினை பரிசளித்துள்ளார். இந்த தகவல் திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கு தமன், இந்த பரிசை பெற்றதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக , "பாலகிருஷ்ணா சாரின் நன்றியுணர்வால் என் மனது மிகவும்  நெகிழ்ச்சியடைந்துள்ளது என்றதுடன் இந்த பரிசு என் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்," என்றும் கூறினார்.

’டாக்கு மஹாராஜ்" படத்தின் வெற்றி, தமனின் இசை மற்றும் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் முக்கிய பங்காற்றியதாக கருதப்படுகிறது. திரை விமர்சகர்களும் ரசிகர்களும் இப்படத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். பலரும் இந்தப் பரிசை பாலகிருஷ்ணாவின் தனித்துவமான அன்பு மற்றும் இசையமைப்பாளருக்கான அங்கீகாரமாக பார்க்கின்றனர்.


இந்த சம்பவம் தெலுங்கு திரைத்துறையில் மேலும் ஒரு முக்கியமான அம்சமாக பேசப்பட்டு வருகிறது. பாலகிருஷ்ணாவின் தாராள மனப்பான்மையை பாராட்டிய பல திரைப்பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வால் தமனின் இசை மீது உள்ள மதிப்பும், அவரது எதிர்கால திரைப்பயணத்திற்கும் பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. இந்த நட்புறவை திரையுலகம் மட்டும் அல்லாது ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement