• Jan 19 2025

சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சனுக்கு நிச்சயதார்த்தம்.. திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ப்ரியா ஜெர்சன் நிச்சயதார்த்தமான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடந்து வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் ப்ரியா ஜெர்சன்.

இந்த சீசனில் அருணா டைட்டில் வின்னர் பட்டம் வென்ற நிலையில் ப்ரியா ஜெர்சனனுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது என்பது அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா ஜெர்சனுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு ஃபாலோயர்கள் அதிகமானது என்பதும் தனது ஃபாலோயர்களுக்காக அவர் பல பதிவுகள் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தான் காதலித்த நபரையே கடைபிடிக்க இருப்பதாகவும் தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம்  முடிந்து விட்டதாகவும் அறிவித்து திருமணம் நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமல் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கி, பூஜா, மானசி உள்பட பல பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement