• Sep 07 2024

நீச்சல் குளம் எல்லாம் வேஸ்ட்.. வயல்வெளி பம்பு செட்டில் குளியல் போட்ட அஞ்சனா ரங்கன்.. செம்ம வீடியோ

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் சினிமா நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி  அஞ்சனா ரங்கன் தனது சமூக வலைதளத்தில் வயல்வெளியில் உள்ள பம்பு செட்டில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய திரையின் சினிமா விழாக்களின் தொகுப்பாளினியான அஞ்சனா ரங்கன் பல ஆண்டுகளாக இருந்து வரும் வருகிறார். இவர் எந்த நிகழ்ச்சியையும் மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார் என்று பெயர் பெற்றவர். அதேபோல் அஞ்சனா ரங்கன் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது டீன் ஏஜ் கேர்ள் போல் கிளாமர் உடையணிந்து புகைப்படங்கள் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

விஜய் உட்பட பல திரைப்பட நடிகர்களின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி உள்ள அஞ்சனா ரங்கன், ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ’ஜூனியர் சூப்பர் சிங்கர்’ ’நட்சத்திர ஜன்னல்’ ’நீங்களும் நாங்களும்’ உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ’கயல்’ திரைப்படத்தில் நடித்த சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அஞ்சனா ரங்கனுக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் தனது குடும்ப புகைப்படத்தையும் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயல்வெளியில் பம்புசெட்டில் குளிக்கும் வீடியோவை அஞ்சனா ரங்கன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’பம்பு செட் குளியல் எனி டைம் நீச்சல் குளம்’ என பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தான் அவர் இந்த குளியல் வீடியோவை எடுத்து உள்ளார் என்று கமெண்ட் பகுதியில் பதிவாகி வருகிறது. மேலும் ‘நீங்கள் செம அழகு’ என்றும் ’நார்மல் தண்ணீரை ஹாட் வாட்டராக மாற்றி விட்டீர்கள்’ என்றும் ’சின்னத்தம்பி பின்னணி பாடல் பொருத்தமாக இருக்கிறது’ என்றும் ’சின்னத்தம்பி பார்ட் 2 எடுத்துவிட வேண்டியது தான், நீங்கள் தான் ஹீரோயின்’ என்றும் பல்வேறு கமெண்ட் பதிவாகி வருகின்றன.


Advertisement

Advertisement