லவ் டுடே, டிராகன் என இரண்டு கொமர்ஷல் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்தும் இருந்தார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றார்.
இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. இதனால் டூ கே கிட்ஸ்க்கு பிடித்த நடிகராகவும் உருவெடுத்தார். அதன் பின்பு வெளியான டிராகன் படமும் இவருக்கு தனிப் பாதையை அமைத்துக் கொடுத்தது.
இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஏற்கனவே அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 18-ஆம் தேதி அன்று வெளியாகும் என புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஒத்தி வைத்ததற்கான காரணம் தொடர்பில் தயாரிப்பாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். அதில் பிரதீப் ரங்கநாதன் நடித்த மற்றொரு படமான 'டியூட்' அக்டோபர் 17ஆம் தேதி அன்று வெளியாக உள்ளமை தான், இந்த மாற்றத்திற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Listen News!