விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் அக்டோபர் ஐந்தாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை இந்த போட்டியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லை. பிக் பாஸ் போட்டியாளர்கள் வந்த முதல் நாள் இருந்தே சண்டை மீண்டுள்ளது. வெளியாகும் ஒவ்வொரு ப்ரோமோவிலும் சண்டை சச்சரவாக தான் காணப்படுகின்றன. அதிலும் திவாகர் எப்படியாவது பேமஸ் ஆகிவிட வேண்டும் என்ற நோக்கோடு சண்டை போடுகின்றாரா? என ரசிகர்களும் குற்றம் சாட்டுகின்றனர்
திவாகர் ஒரு பிசியோதெரபி மருத்துவர். இது அரசால் அங்கீகரிக்கப்படாதது அதனால் இவர் மருத்துவரெல்லாம் இல்லை என்பது போல் கெமி பேசி இருந்தார். அதற்காக கெமி உடன் சண்டை போட்டார் திவாகர்.
அதன் பின்பு குரட்டை விஷயத்தில் பிரவீன் ராஜ் உடன் சண்டை போட்டார் திவாகர் . இன்றைய தினம் வெளியான ப்ரோமோவிலும் ரம்யா ஜோவுடன் வாக்குவாதம் பண்ணினார்.
இந்த நிலையில், திவாகர் செய்த சேட்டை, பிக்பாஸ் ரூல்ஸ் மீறியது போன்ற விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளன. அதாவது விஜய் சேதுபதி நடித்த பவானி கேரக்டரை அப்படியே நடித்துக் காட்டியுள்ளார்.
குளிக்கச் சென்ற இடத்தில் சோப்பு நுரைகளால் தன்னை அலங்கரித்து, பவானி கேரக்டரில் நடித்துள்ளார் திவாகர். அதற்கு கம்பெனி கொடுத்துள்ளார் கலையரசன். இதை எல்லாம் பார்த்த ரசிகர்கள் இந்த சீனை விஜய் சேதுபதி கண்ணில் படும் வரை பகிர வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் திவாகர் சரியாக ஜிப் போடவில்லை, ஃபேன்ட் போடவில்லை என்ற குற்றசாட்டையும் முன்வைத்துள்ளனர். மேலும் நீச்சல் குளத்தில் தண்ணீர் எடுக்க வேண்டாம் என்று பிக்பாஸ் போட்ட ரூல்ஸையும் மீறி உள்ளார் திவாகர்.
Listen News!