• Oct 08 2025

இவரு மட்டும் மூக்க நொட்டுவாரு.. ஒப்பாரி வைத்த ரம்யா ஜோ.? Watermelon சாப்டர் க்ளோஸ்

Aathira / 19 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, இயக்குனர் பிரவீன் காந்த், சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன், 

இன்ஸ்டா பிரபலங்களான ரம்யா ஜோ மற்றும் சுபிக்‌ஷா,   துஷார் , கானா வினோத், அகோரி கலையரசன், ஆர்ஜே கெமி மற்றும் நந்தினி, ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், திருநங்கை அப்சரா, சீரியல் நடிகை ஆதிரை, மாடல் அழகியான வியானா உள்பட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் 9வது சீசன் ஆரம்பித்து இரண்டாவது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் மீண்டும் திவாகரோடு ஹவுஸ்மேட்ஸ் மோதும் சம்பவம் பதிவாகி உள்ளது.


நேற்றைய தினம்  திவாரகருக்கும் கெனி, பிரவீனுக்கும் இடையில் சின்ன வாக்குவாதம் தொடங்கியது.  தற்போது அதனை   மையமாகக் கொண்டு   ரம்யா ஜோ பேசுகின்றார். 

அதாவது  திவாகர் விஷயத்தில் கெனியோ பிரவீன் அண்ணாவோ எதுவும் சொல்லக்கூடாது. ஆனா  இவரு மட்டும் எல்லாருடைய விஷயத்திலும் மூக்கை நொட்டி  இது தப்பு,  இது சரின்னு சொல்லுவாரு.. என்று கனி திரு சொல்லுகிறார்.

இதை கேட்ட திவாகர் நான் சொல்றத கேளுப்பா என்று சொல்ல,  ரம்யா ஜோ அவரை பேச விடாமல் கத்துகின்றார்.  இதற்கு இடையில் எடுகேஷன் என்றால் என்ன என்று தெரியுமா?  என எஃப்.ஜே கேட்கின்றார்.   

அவருடன் இணைந்து கமருதினும்  திவாகரை திட்டுகின்றார் .   இந்தச் சண்டையில்  ரம்யா ஜோ அழுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..

Advertisement

Advertisement