• Jan 19 2025

ஆயிரக் கணக்கானோர் மத்தியில் பிரதீப்புக்கு கிடைத்த ராஜ மரியாதை..! எங்கே என்று தெரியுமா? கொண்டாடும் ரசிகர்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அண்மையில் தான் மாஸாக நிறைவு பெற்றது.

பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை, பல திருப்பங்கள், மோதல்கள், காதல்கள், ட்விஸ்ட்கள், பரபரப்பு, பரிதாபம் என நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்றது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இம்முறை இடம்பெற்ற சீசனில், எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் என்றால் அது பிரதீப்பின் ரெட் கார்ட் விவகாரம் தான்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கதவை திறந்து வைத்துக் கொண்டு டாய்லெட் செல்கிறார் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.


எனினும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிரதீப்புக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசிங்கப்பட்டாலும், தற்போது வரையில் மக்கள் மத்தியில் நல்ல மதிப்புடன் தான் காணப்படுகிறார்.

இந்த நிலையில், தற்போது முதன்முறையாக பள்ளி ஆண்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார் பிரதீப். அதில் பிரதீப்புக்கு ராஜ மரியாதை கொடுத்து மாஸான வரவேற்பும் அளித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் வெளியாக அவரது ரசிகர்கள் சூப்பர், வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement