தமிழ் சினிமாவில் Action, Romance என கலவையுடன் உருவாகும் படங்களில் தலைசிறந்த இடத்தை பிடித்து வருகிறார் தளபதி விஜய். இதுவரை அவர் நடித்த படங்களில் ஒரு குறிப்பிட்ட வெற்றிப் பாதையை நிலைநிறுத்திய படம் கில்லி, இன்று கூட ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்து நிற்கிறது. அதே போல, டியூட் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தனது அடுத்த படத்தை கில்லி பாணியில் உருவாக்க திட்டமிட்டுள்ளார் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அதன்போது, “Action, காதல் என ஒரு கலவையான ஜானரில் தளபதி விஜய்யின் கில்லி படம் இருக்கும். தரணியின் திரைக்கதை, விஜய், பிரகாஷ் ராஜின் அதிரடியான நடிப்பு என படமே மாஸாக இருக்கும். அதனால் எனது இரண்டாம் படத்தை கில்லி பாணியில் இயக்கப்போகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இந்த பேட்டி திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே கில்லி திரைப்படம் தனது அதிரடி கலர்ஃபுல் Action sequences மற்றும் காதல் கதை காரணமாக ரசிகர்கள் மனதில் நீடித்த இடத்தை பிடித்தது.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் திரையுலகில் தன்னை நிரூபித்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது. அவர் முன்னதாக சுதா கொங்கராவின் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த அனுபவம் அவருக்கு பட இயக்கத்தின் கலை மற்றும் தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ள உதவியுள்ளது.
அதன் பின்னர், முதன்முறையாக இயக்கிய படம் ‘டியூட்’ மூலம் திரையுலகில் படைப்பாற்றல் கொண்ட இயக்குநராக தனது அடையாளத்தை நிறுவினார்.
டியூட் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரதீப் ரங்கநாதன் நடித்த இந்த படம் ரசிகர்கள் மனதில் நன்றாக இடம்பிடித்தது. வசூல் ரீதியாகவும் படம் நல்ல கமர்ஷியல் வெற்றியை அடைந்தது. இதனால் கீர்த்தீஸ்வரனுக்கு அடுத்த படத்தை இயக்கும் துணிச்சல் மற்றும் உற்சாகம் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!