• Feb 22 2025

அஜித் தான் பெஸ்ட், விஜய் பப்ளிசிட்டி மனிதர்.. வெளுத்து வாங்கும் வீரலட்சுமி..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


அஜித் மக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்வார், ஆனால் அதை அவர் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார் என்றும், ஆனால் விஜய் சிறு உதவி செய்தாலும் அதை பப்ளிசிட்டி செய்து பெரிதுபடுத்துவார் என்றும் வீரலட்சுமி பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பெண் அரசியல்வாதிகளில் ஒருவரான வீரலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர்களுக்காக ரசிகர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள், இது தேவையில்லாதது, உங்களுடைய டிக்கெட் பணத்தில் அவர்கள் கோடீஸ்வரர் ஆகி, அதன் பின்னர் அந்த பணத்தை காப்பாற்றிக்கொள்ள அரசியல் கட்சி ஆரம்பித்து செட்டில் ஆகி விடுகிறார்கள், ஆனால் ரசிகர்களாகிய நீங்கள் தான் கடைசிவரை ஏழ்மை நிலையில் உள்ளீர்கள் என்றும் தெரிவித்தார்.



ஒரு சினிமா ரசிகர் என்பவர் சினிமாவை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், அதை விட்டு சினிமா நடிகருக்காக உயிரை கொடுப்பேன் என்று பேசுவது, வாழ்க்கை எடுத்துக் கொள்வது தேவையில்லாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்கள் குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, அக்கா, தம்பி, அண்ணன் ஆகியோர்களை கவனித்துக் கொள்ளுங்கள், ஒருவேளை அவர்களுக்காக உயிரை கொடுக்க வேண்டும் என்றால் கூட அது ஒரு தியாகமாக கருதப்படும். ஆனால் எவனோ ஒரு நடிகருக்காக எதற்காக நீங்கள் உயிரை கொடுக்கின்றீர்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அஜித் பல உதவிகள் செய்தார், ஆனால் அதை அவர் வெளியே சொல்லவில்லை. ஆனால் விஜய் ரசிகர்கள் உதவி செய்யும் போது, அதாவது சாப்பாடு போடும்போது கூட விஜய்யின் புகைப்படத்தை வரிசையாக கொண்டு வந்து காட்டி கொண்டிருக்கிறார்கள், இது மிகவும் கேவலமானது, விஜய் ஒரு பப்ளிசிட்டி மனிதர்’ என்று வீரலட்சுமி ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

Advertisement